ADDED : செப் 27, 2025 01:24 AM
அ நிறம் | அளவு
மல்லசமுத்திரம், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில், நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. சூரியகவுண்டம்பாளையம், மங்களம், மேல்முகம், காளிப்பட்டி, அம்மாபட்டி,
செண்பகமாதேவி, பள்ளக்குழி, கரட்டுவளவு, மானுவங்காட்டுபாளையம், பள்ளிப்பட்டி, கொளங்கொண்டை, பருத்திப்பள்ளி, ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடையுள்ள, 23 மூட்டை கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். முதல் தரம் கிலோ, 196.45 ரூபாய் முதல், 223.75 ரூபாய், இரண்டாம் தரம், 131 ரூபாய் முதல், 143 ரூபாய் என, மொத்தம், 1.62 லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 3ல் நடக்கிறது.
