sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

17 தனி தாசில்தார்கள் இடமாற்றம்

/

17 தனி தாசில்தார்கள் இடமாற்றம்

17 தனி தாசில்தார்கள் இடமாற்றம்

17 தனி தாசில்தார்கள் இடமாற்றம்


ADDED : ஆக 27, 2025 01:24 AM

Google News

ADDED : ஆக 27, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில், 17 தனி தாசில்தார்களை இடமாற்றம் செய்து, கலெக்டர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:

முத்திரை கட்டண தனி தாசில்தார் திருமுருகன், கலெக்டர் அலுவலக இசைவு தீர்வாயத்துக்கும்; அங்கிருந்த ராஜேஸ்கண்ணா, டாஸ்மாக் உதவி மேலாளராகவும்; அங்கிருந்த ராஜ்குமார், சேந்தமங்கலம் தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். சேந்தமங்கலம் தனி தாசில்தார் சரவணகுமார், குமாரபாளையம் வட்ட தனி தாசில்தாராகவும்; குமாரபாளையம் தாலுகா, தனி தாசில்தார் மாதேஸ்வரி, திருச்செங்கோடு தாலுகா தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப் பட்டனர்.

திருச்செங்கோடு தாலுகா தனி தாசில்தார் கோவிந்தசாமி, ப.வேலுார் தாசில்தாராகவும்; அங்கிருந்த முத்துக்குமார், நாமக்கல் தாலுகா, தனி தாசில்தராகவும்; அங்கு பணியாற்றிய பிரகாஷ், குமாரபாளையம் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் தாசில்தார் சிவக்குமார், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளராகவும்; அங்கிருந்த தமிழரசி, கலால் மேற்பார்வை அலுவலராகவும்; அங்கு பணிபுரிந்த சசிகலா, நெடுஞ்சாலைகள் நில எடுப்பு தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்.

நெடுஞ்சாலைகள் நில எடுப்பு தனி தாசில்தார் சண்முகவேலு, மோகனுார் தாலுகா தனி தாசில்தாராகவும்; அங்கு பணியாற்றிய கார்த்திகேயன், கலெக்டர் அலுவலக மேலாளராகவும் (பொது), அங்கு பணிபுரிந்த மணிகண்டன், முத்திரைத்தாள் கட்டண தனி தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். கோட்டக் கலால் அலுவலர் கண்ணன், கலெக்டர் அலுலகத்தில், பேரிடர் மேலாண் தனி தாசில்தாராகவும்; அங்கு பணியாற்றிய அரவிந்தன், கலெக்டர் அலுவலக மேலாளராகவும், கலெக்டர் அலுவலக மேலாளர் சீனிவாசன், கோட்ட கலால் அலுவலராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us