/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
185 கிலோ குட்கா பறிமுதல் பதுக்கி வைத்த 4 பேர் கைது
/
185 கிலோ குட்கா பறிமுதல் பதுக்கி வைத்த 4 பேர் கைது
185 கிலோ குட்கா பறிமுதல் பதுக்கி வைத்த 4 பேர் கைது
185 கிலோ குட்கா பறிமுதல் பதுக்கி வைத்த 4 பேர் கைது
ADDED : நவ 18, 2024 03:03 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம், ஈரோடு பகுதியில் பதுக்கிய, 185 கிலோ குட்-காவை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிப்பாளையம் பகுதியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்க-நாதன், பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று மாலை, பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., வழித்தடத்தில் உள்ள பூஜை ஸ்டோரில் அதிகாரிகள், போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு குட்கா பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஸ்டோர் உரிமையாளர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பான்சிங், 48, இவரது மகன் ஈஸ்வர்சிங், 19, ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் கொடுத்த தகவல்படி, ஈரோட்டில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோட்டராம், 34, கைது செய்து, 20 கிலோ குட்கா, பள்ளிப்பாளையம் அருகே புளியங்காடு பகுதியை சேர்ந்த கனகமூர்த்தி, 48, என்பவரை கைது செய்து, 15 கிலோ குட்-காவை பறிமுதல் செய்தனர்