ADDED : மார் 27, 2025 01:33 AM
அ நிறம் | அளவு
ரூ.18.50 லட்சத்திற்குபருத்தி விற்பனை
மல்லசமுத்திரம்:திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்தில், மாமரப்பட்டி, மேல்முகம், மங்களம், பீமரப்பட்டி, சின்னகாளிப்பட்டி, ராமாபுரம், பருத்திப்பள்ளி, மரப்பரை, வையப்பமலை, நாகர்பாளையம், பள்ளக்குழி அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடைகொண்ட, 900 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், பி.டி., ரகம் குவிண்டால், 7,219 ரூபாய் முதல், 8,650 ரூபாய்; கொட்டு பருத்தி, 3,755 ரூபாய் முதல், 4,665 ரூபாய் என, மொத்தம், 18.50 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 2ல் நடக்கிறது.
