sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

லோக்சபா தேர்தல் எதிரொலி மாவட்டத்தில் 19 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம்

/

லோக்சபா தேர்தல் எதிரொலி மாவட்டத்தில் 19 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம்

லோக்சபா தேர்தல் எதிரொலி மாவட்டத்தில் 19 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம்

லோக்சபா தேர்தல் எதிரொலி மாவட்டத்தில் 19 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம்


ADDED : பிப் 06, 2024 10:34 AM

Google News

ADDED : பிப் 06, 2024 10:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மாவட்டத்தில், 19 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம் செய்து, நாமக்கல் கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார்.

லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. அதையடுத்து, தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்கு ஒரே இடத்தில் பணியாற்றிய அரசுத்துறை அதிகாரிகள், நாடு முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றிய பி.டி.ஓ.,க்கள், 19 பேரை இடமாற்றம் செய்து, கலெக்டர் உமா

உத்தரவிட்டுள்ளார்.

அதன் விபரம் பின் வருமாறு: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கூடுதல் பி.டி.ஓ., அருண்குமார், அதே பிரிவில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பரமத்தி பி.டி.ஓ., (கிராம பஞ்.,) நடராஜன், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட கூடுதல் பி.டி.ஓ.,வாகவும், திருச்செங்கோடு பி.டி.ஓ., (கிராம பஞ்.,) கஜேந்திரபூபதி, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு பி.டி.ஓ.,வாகவும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

மாவட்ட சேமிப்பு அலுவலக பி.டி.ஓ., சங்கர், நாமக்கல் டேன்பிநெட் பி.டி.ஓ.,வாகவும், மல்லசமுத்திரம் பி.டி.ஓ., (கிராம பஞ்.,) லோகமணிகண்டன், எலச்சிபாளைத்துக்கும், புதுச்சத்திரம் பி.டி.ஓ., (கிராம பஞ்.,) மகாலட்சுமி, எருமப்பட்டிக்கும் (வட்டார பஞ்.,) இடமாற்றம் செய்யப்பட்டனர்.

எருமப்பட்டி பி.டி.ஓ., (வட்டார பஞ்.,) சுகிதா, அதே வட்டாரத்தில், கிராம பஞ்.,க்கும், பள்ளிப்பாளையம் பி.டி.ஓ., மலர்விழி (கிராம பஞ்.,), கபிலர்மலைக்கும், எருமப்பட்டி பி.டி.ஓ., (கிராம பஞ்.,) பத்பநாபன், கொல்லிமலைக்கும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பி.டி.ஓ., விஜயகுமார், மல்லசமுத்திரத்துக்கும், சேந்தமங்கலம் பி.டி.ஓ., (கிராம பஞ்.,) ரவிச்சந்திரன், மோகனுாருக்கும், எலச்சிபாளையம் பி.டி.ஓ., (கிராம பஞ்.,) பிரபாகர், நாமக்கல்லுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கபிலர்மலை பி.டி.ஓ., (வட்டார பஞ்.,) பள்ளிப்பாளையத்துக்கும் (கிராம பஞ்.,), நாமக்கல் பி.டி.ஓ., பாஸ்கர் (கிராம பஞ்.,) பரமத்திக்கும், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக பி.டி.ஓ., ஜெயக்குமரன், சேந்தமங்கலத்துக்கும் (வட்டார பஞ்.,) பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், எலச்சிபாளையம் பி.டி.ஓ., (வட்டார பஞ்.,) பி.மலர்விழி, ராசிபுரத்துக்கும், அங்கு பணியாற்றிய அருளப்பன், அதே வட்டாரத்தில் வட்டார பஞ்.,க்கும், வெண்ணந்துார் பி.டி.ஓ., (கிராம பஞ்.,) சரவணன், திருச்செங்கோட்டுக்கும், ராசிபுரம் பி.டி.ஓ., (கிராம பஞ்.,) மேகலா, வெண்ணந்துாருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us