நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், நாமக்கல், வளையப்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, மோகனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சோதனை செய்த போலீசார், வளையப்பட்டி சந்தானம், 48, என்பவரது டீக்கடையில் இருந்து, 300 கிராம் எடையுள்ள, 15 பாக்கெட் போதைப்பொருள்; தியாகராஜன், 32, என்பவரது மளிகை கடையில், 18 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து மோகனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

