/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்ற 2 பேர் கைது
/
வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்ற 2 பேர் கைது
ADDED : நவ 23, 2025 01:39 AM
புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். காமாட்சி அம்மன் கோவில் பின்புறம் ஒரு வீட்டில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலை அடுத்து வீட்டை சுற்றி வளைத்தனர்.
அங்கு நான்கு பேர் சாக்குப்பையில் கஞ்சாவை வைத்து சிறு பொட்டலங்களாக பேக் செய்து கொண்டிருந்தனர்.
போலீசாரை கண்டதும் இருவர் ஓடிவிட்டனர். இருவரை பிடித்த போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் புளியம்பட்டி அருகே செல்லம்பாளையத்தை சேர்ந்த தனுஷ், 18; வடுகபாளையத்தைச் சேர்ந்த குரு பிரகாஷ், 18; என்பது தெரிந்தது. அப்பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், ஒரு கிலோ கஞ்சா, 5 செல்போன், பதிவெண் இல்லாத டியூக் பைக்கை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய புளியம்பட்டி தேவாங்க வீதி மணிகண்டன், 18; பெத்த நாயக்கன்பாளையம் பிரதாப், 19, ஆகியோரை தேடி வருகின்றனர்.

