ADDED : ஆக 25, 2025 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல்-துறையூர் சாலை, அண்ணா நகரில், மோகன் மற்றும் கந்தசாமி ஆகியோர், தாபா நடத்தி வருகின்றனர்.
அங்கு அரசு விதிமீறி மதுபானம் விற்பதாக, நாமக்கல் போலீசாருக்கு புகார் சென்றது. இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையிலான போலீசார், தாபாவில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பணிபுரிந்த திருச்சி, முசிறியை சேர்ந்த காளிமுத்து, 36, என்பவர் மது பாட்டில்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், எட்டு மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.