ADDED : மே 31, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த பச்சாம்பாளையம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக, வெப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை வெப்படை போலீசார், அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, போதை மாத்திரை விற்பனை செய்துகொண்டிருந்த, படவீடு பகுதியை சேர்ந்த கிரிஹரன், 28, பச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன், 23, ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 40 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், 'ஆன்லைன்' மூலம் போதை மாத்திரை வாங்கி, ஒரு மாத்திரை, 35 ரூபாய்க்கு வாங்கி, 350 ரூபாய்க்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதில், கிரிஹரன், ஏற்கனவே போதை மாத்திரை விற்பனையில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.