/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெங்களூருவில் இருந்து 250 கிலோ புகையிலை பொருள் கடத்திய 2 பேர் கைது
/
பெங்களூருவில் இருந்து 250 கிலோ புகையிலை பொருள் கடத்திய 2 பேர் கைது
பெங்களூருவில் இருந்து 250 கிலோ புகையிலை பொருள் கடத்திய 2 பேர் கைது
பெங்களூருவில் இருந்து 250 கிலோ புகையிலை பொருள் கடத்திய 2 பேர் கைது
ADDED : ஜன 06, 2025 02:02 AM
நாமக்கல்: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வரப்-பட்ட, 85,000 ரூபாய் மதிப்புள்ள, 250 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், கடத்தலில் ஈடு-பட்ட, 2 பேரை கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி வருவதாக, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணனுக்கு தகவல் வந்-தது. அவரது உத்தரவுப்படி, நாமக்கல் - கரூர் புறவழிச்சா-லையில், நல்லிபாளையம் பிரிவு சாலையில், நல்லிபாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வ-ழியாக வந்த 'ஹூண்டாய் வீர்னா' காரை நிறுத்தி சோதனை செய்-தனர். அதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட, 250 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, காருடன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு, 85,000 ரூபாய்.போலீசார் நடத்திய விசாரணையில், வள்ளிபுரத்தை சேர்ந்த தக்-காளி வியாபாரி செந்தில்ராஜ், 46, நாமக்கல் ஜெட்டிக்குள தெருவை சேர்ந்த தவுபிக் ரகுமான், 41, ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், அவர்கள், பெங்களூருவில் இருந்து, நாமக்கல் வரை குட்கா பொருட்களை கடத்தி வர, 25,000 ரூபாய் வாடகை பெற்று கடத்தி வந்தது தெரியவந்தது. அதையடுத்து, செந்தில்ராஜ், தவுபிக் ரகுமான் ஆகிய இருவ-ரையும் போலீசார் கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.