/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒடிசாவிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பு கஞ்சா கடத்தி வந்த 2 பேர் சிக்கினர்

ADDED : ஆக 19, 2025 01:08 AM
நாமக்கல், ஒடிசாவில் இருந்து நாமக்கல்லுக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 17.50 கிலோ கஞ்சா கடத்தி வந்த, இரண்டு வாலிபர்களை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
ஒடிசாவில் இருந்து நாமக்கல்லுக்கு, ரயில், பஸ் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக, நாமக்கல் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாமக்கல் முதலைப்பட்டியில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்டில், இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், நேற்று மாலை, 4:00 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகப்படும் வகையில், பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த, இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் வைத்திருந்த பைகளில், 17.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். விசாரணையில், மதுரையை சேர்ந்த சிவபிரகாஷ், 24, நாமக்கல் மாவட்டம், முட்டாஞ்செட்டியை சேர்ந்த லோகேஷ், 23, என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்த, 17.50 கிலோ கஞ்சாவின் மதிப்பு, 10 லட்சம் ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.