/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவில் நகையை திருடிய 2 பேர் கைது
/
கோவில் நகையை திருடிய 2 பேர் கைது
ADDED : நவ 24, 2025 01:34 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, அப்பநாய்க்கன்பட்டியில் மாரி-யம்மன் கோவில் உள்ளது. பூசாரியாக பழனிசாமி, 60, என்பவர் உள்ளார். கடந்த ஜூலை மாதம், கோவிலை திறக்க சென்ற பழனி-சாமி, கோவில் முன் பக்கம் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தர்மகர்த்தா தன்ராஜூக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த தன்ராஜ், கோவிலில் சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த தாலியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய-வந்தது. நாமகிரிப்பேட்டை போலீசில் புகாரளித்தார்.போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா மற்றும் மொபைல் போன் சிக்னல்களை வைத்து விசாரணை நடத்தினர். அதில், தர்மபுரி மாவட்டம், சிட்லிங், மலைதாங்கி பகுதியை சேர்ந்த சின்னையன் மகன் கணேசன், 43, அரூர் அடுத்த கோட்-டப்பட்டி புதுக்கோட்டையை சேர்ந்த செல்வம் மகன் குமார், 38, என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நகையை மீட்டனர்.

