ADDED : மே 20, 2026 05:42 AM
பள்ளிப்பாளையம்:சேலம் மாவட்டம், தாரமங்கலம் மற்றும் மேட்டூரை சேர்ந்த ராஜா, 25, ரமேஷ், 33, ஆகிய இருவர் மீதும், 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ள நிலையில், இருவரும் ஒரு குற்ற வழக்கில் தண்டனை பெற்று, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருவரும் பழக்கமாகி நண்பர்களாகினர். இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த இருவரும், சேலத்தில், மூன்று டூவீலர், பள்ளிப்பாளையத்தில், ஒரு டூவிலர் என, மொத்தம், நான்கு டூவீலரை திருடியுள்ளனர்.
மேலும், கடந்த வாரம் பள்ளிப்பாளையம் அடுத்த தாஜ்நகர் பகுதியில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டில் இருந்த பணம், வெள்ளிப் பொருட்களை திருடியது தெரியவந்தது.இந்நிலையில், நேற்று காலை வெடியரசம்பாளையம் பகுதியில் ராஜா, ரமேஷ் இருவரையும் பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து, நான்கு டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர்.
