ADDED : அக் 13, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்;வெண்ணந்துார் ஒன்றியம், கட்டனாச்சம்பட்டி மேட்டு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பாட்டப்பன், 55; இவர் ஆடுகளை, வீடு அருகே உள்ள கொட்டகையில் அடைத்து வளர்த்து வருகிறார். வழக்கம்போல், நேற்று முன்தினம் இரவு, ஆடுகளை கொட்டகையில் அடைத்துவிட்டு சென்றார்.
நேற்று காலை விடிந்ததும், ஆடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, இரண்டு ஆடுகள் இறந்து கிடந்தன. இரவில் புகுந்த வெறிநாய்க், ஆடுகளை கடித்து குதறியது தெரியவந்தது. வெறிநாய்களை பிடிக்க, ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.