ADDED : நவ 06, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார், தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, கவுரி தியேட்டர் பஸ் ஸ்டாப், தினசரி காய்கறி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் லாட்டரி விற்ற, வீரமூப்பன், 59, விஷ்ணு, 24, ஆகிய இருவரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.