ADDED : அக் 29, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார், பரமத்தி அருகே, புலவர் பாளையம் பகுதியில் உள்ள கடைகளில் குட்கா பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பரமத்தி எஸ்.ஐ., ராசப்பன் தலைமையில் போலீசார், பரமத்தி பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில், புலவர்பாளையத்தில் உள்ள ஒரு கடையில் ஆய்வு மேற்கொண்டபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். மேலும், புலவர்பாளையத்தை சேர்ந்த சம்பூர்ணம், 42, என்பவரை கைது செய்தனர்.
* குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார், அரசு பள்ளி சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருள் விற்ற கடை உரிமையாளர் ஓவி ரெட்டியை கைது செய்தனர்.

