ADDED : செப் 04, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையத்தில் லாட்டரி சீட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., பிரபாகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, குமாரபாளையம் ராஜம் தியேட்டர், ஆலங்காட்டுவலசு பகுதியில் லாட்டரி விற்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு நேரில் சென்ற போலீசார், லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் பூபதி, 40, ஏகாம்பரம், 50, ஆகிய இருவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து, லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல்
செய்தனர்.