/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது
/
பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது
ADDED : பிப் 23, 2024 01:42 AM
குமாரபாளையம்;குமாரபாளையம் பெராந்தர்காடு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மனைவி சுமதி, 45; ஜவுளி தொழிலாளி. கடந்த, 15ல் வங்கியிலிருந்து, காந்திபுரம் பகுதியில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள், 2 பேர், சுமதியை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த, 4 பவுன் தங்க தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து புகார்படி வழக்குப்பதிவு செய்து, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி விசாரணை நடத்தி வந்தார். இதில், மதுரையை சேர்ந்த சதீஷ், 24, அலெக்ஸ் பாண்டியன், 24, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் உள்ள பழயை வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த அவர்கள் இருவரையும் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, இருவரையும் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.