/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொக்லைன் இயந்திரத்தை திருடிய 'மாஜி' டிரைவர் உள்பட 2 பேர் கைது
/
பொக்லைன் இயந்திரத்தை திருடிய 'மாஜி' டிரைவர் உள்பட 2 பேர் கைது
பொக்லைன் இயந்திரத்தை திருடிய 'மாஜி' டிரைவர் உள்பட 2 பேர் கைது
பொக்லைன் இயந்திரத்தை திருடிய 'மாஜி' டிரைவர் உள்பட 2 பேர் கைது
ADDED : ஜன 04, 2025 01:29 AM
நாமக்கல், ஜன. 4-
நாமக்கல் அடுத்த என்.புதுக்கோட்டை பீமநாயக்கனுாரை சேர்ந்தவர் சிவக்குமார், 41; விவசாயி. இவர், சொந்தமாக பொக்லைன் இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது பொக்லைன் இயந்திரத்தை, சின்னவேப்பனம் அருகே உள்ள அலுவலகம் முன் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில், 2024 நவ., 30ல், அலுவலகம் முன் பொக்லைன் வண்டியை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, பொக்லைன் வண்டியை காணவில்லை. இதுகுறித்து, நாமக்கல் போலீசில் புகாரளித்தார்.
விசாரணையில், 4 ஆண்டுகளுக்கு முன், சிவக்குமாரிடம் டிரைவராக வேலை பார்த்த ஆண்டா
புரத்தை சேர்ந்த டிரைவர் சேதுமணி, 30,
என்பவர், பொக்லைன் இயந்திரத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த வண்டியை, கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பொய்யாமணியை சேர்ந்த உறவினர் பாஸ்கர், 25, என்பவரின் ஊருக்கு எடுத்து சென்று, பெயர் மாற்றம் செய்து ஓட்டி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சேதுமணி, பாஸ்கர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், பொக்லைன் வண்டியையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

