/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முதியோர் இல்லம் நடத்துவதாக கூறி திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது
/
முதியோர் இல்லம் நடத்துவதாக கூறி திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது
முதியோர் இல்லம் நடத்துவதாக கூறி திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது
முதியோர் இல்லம் நடத்துவதாக கூறி திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது
ADDED : நவ 09, 2025 05:05 AM
ப.வேலுார்:முதியோர்
இல்லம் நடத்துவதாக கூறி, வீடு வீடாக சென்று வசூலில் ஈடுபட்ட பெண்கள்,
மொபைல் போன், பணம் திருடிக்கொண்டு தப்பியபோது சிக்கினர்.
நாமக்கல்
மாவட்டம், ப.வேலுார் அருகே, பொத்தனுார், சக்ரா நகரை சேர்ந்த சங்கர், 40;
டிரைவர். இவரது மனைவி சந்திரா, 35; டைலர். நேற்று காலை, 11:00 மணிக்கு
இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் சந்திராவின் தம்பி
சங்கர், 25, மட்டும் மாடியில் இருந்துள்ளார். அப்போது, அப்பகுதிக்கு
வந்த, இரண்டு பெண்கள், நாமக்கல்லில் முதியோர் இல்லம் நடத்தி வருவதாக
கூறி, பண உதவி செய்யுமாறு வீடு, வீடாக சென்று பணம் வசூலித்துள்ளனர்.
சிறிது
நேரம் கழித்து, சங்கர் மாடியில் இருந்து இறங்கி வந்து பார்த்தபோது,
ஹாலில் வைத்திருந்த மொபைல் போன், பணத்தை காணவில்லை.
அதிர்ச்சியடைந்த சங்கர், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது,
முதியோர் இல்லத்திற்கு உதவி கேட்டு வந்த, இரண்டு பெண்கள் திருட்டில்
ஈடுபட்டிருக்கலாம் என, தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அவர்களை
தேடியபோது, அந்த பெண்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை பிடித்து,
ப.வேலுார் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், சேலம்,
அன்னதானப்பட்டியை சேர்ந்த புவனேஸ்வரி, 39, அதே பகுதியை சேர்ந்த
மீனா, 25, என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து திருடிய மொபைல்
போன் மற்றும் 1,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து
நடத்திய விசாரணையில், இரண்டு பெண்களும் முதியோர் இல்லம் நடத்துவதாக
கூறி, ப.வேலுார், பொத்தனுார் பகுதிகளில் பணம் வசூல் செய்து மோசடியில்
ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், வேறு
இடங்களில் மோசடியில் ஈடுபட்டார்களா என விசாரித்து வருகின்றனர்.

