/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
20 பவுன் நகை திருடியவருக்கு 2 ஆண்டு சிறை, அபராதம்
/
20 பவுன் நகை திருடியவருக்கு 2 ஆண்டு சிறை, அபராதம்
ADDED : ஜன 20, 2024 09:56 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த அலங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி, 57. இவரது மனைவி மணிமேகலை, 50. இவர்கள் கடந்த, 2010 இரவில் வீட்டை பூட்டாமல், வீட்டுக்கு வெளியே படுத்து துாங்கி கொண்டிருந்தனர்.
அப்போது, மர்ம நபர் ஒருவர் வீட்டின் உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த, 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றார். இதுகுறித்து, எருமப்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த முருகேசன், 45, என்பவர், நகைகளை திருடியது தெரியவந்தது.
அவரை, போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, சேந்தமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று, நீதிபதி ஹரிஹரன் விசாரித்து, முருகேசனுக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.