210 குடும்பத்தினர் தனியாக பூஜைவிழா நடத்த அனுமதி கோரி மனு
210 குடும்பத்தினர் தனியாக பூஜைவிழா நடத்த அனுமதி கோரி மனு
ADDED : ஏப் 08, 2025 02:07 AM
அ நிறம் | அளவு
210 குடும்பத்தினர் தனியாக பூஜைவிழா நடத்த அனுமதி கோரி மனு
நாமக்கல்:ராசிபுரம் அடுத்த நடுப்பட்டியில், 210 குடும்பத்தினர் தனியாக திருவிழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில், 2023ல், 65 லட்சம் ரூபாய் மதிப்பில், மாரியம்மன், விநாயகர், கடகடப்பன் மற்றும் மதுரைவீரன் கோவில்களை கட்டி கும்பாபிஷேகம் நடத்தினோம். தற்போது, தினசரி பூஜை, திருவிழா நடத்துவதை தனிநபர் சிலர் தடை செய்து வருகின்றனர். அதனால், 210 குடும்பத்தினர் தனியாக பூஜை மற்றும் திருவிழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
