/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேந்தமங்கலம் அருகே நாய்கள் கடித்து குதறியதில் 23 ஆடுகள் பலி
/
சேந்தமங்கலம் அருகே நாய்கள் கடித்து குதறியதில் 23 ஆடுகள் பலி
சேந்தமங்கலம் அருகே நாய்கள் கடித்து குதறியதில் 23 ஆடுகள் பலி
சேந்தமங்கலம் அருகே நாய்கள் கடித்து குதறியதில் 23 ஆடுகள் பலி
ADDED : மார் 20, 2024 10:39 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, அக்கியம்பட்டியில் தோட்டத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த, 23 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தன.
சேந்தமங்கலம் அருகே, அக்கியம்பட்டியை சேர்ந்தவர் கருப்பண்ணன், 60; விவசாயி. இவர், தோட்டத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து, 26 ஆடுகள், 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கருப்பண்ணன் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு, வழக்கம் போல் இரவில் தோட்டத்தில் உள்ள கொட்டகையில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார்.
நள்ளிரவில், கம்பி வேலியில் இருந்த சிறிய ஓட்டை வழியாக புகுந்த, 5க்கும் மேற்பட்ட நாய்கள் அங்கு கட்டியிருந்த, 25 ஆடுகளை கடித்து குதறி ரத்தம் குடித்துள்ளன. இதில், 25 ஆடுகளும் உயிரிழந்தன. காலையில் அப்பகுதி வழியாக சென்றவர்கள், கருப்பண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, இரண்டு ஆடுகள் மட்டும் காயங்களுடன் துடித்துக்கொண்டிருந்தன. தகவலறிந்து வந்த கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் நாராயணன், துணை இயக்குனர் விஜயகுமார், அக்கியம்பட்டி கால்நடை மருத்துவர் சரஸ்வதி உள்ளிட்டோர் நேரில் சென்று உயிரிழந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.
இதுகுறித்து, விவசாயி கருப்பண்ணன் கூறியதாவது: இப்பகுதியில் அடிக்கடி நாய்கள் ஆடுகளை கடித்து வருகின்றன. இதனால், தான் கம்பி வேலி அமைத்துள்ளோம். ஆனால், கம்பி வேலியில் உள்ள ஓட்டை வழியாக புகுந்த நாய்கள், ஆடுகளை கடித்து குதறியுள்ளன. உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு, 2.50 லட்சம் ரூபாய். எனவே, உயிரிழந்த ஆடுகளுக்கு, கலெக்டர் நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

