/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'24 மணி நேரத்தில் வரி செலுத்தவில்லைஎன்றால் அசையா சொத்துக்கள் ஜப்தி'

ADDED : மார் 28, 2025 01:39 AM
'24 மணி நேரத்தில் வரி செலுத்தவில்லைஎன்றால் அசையா சொத்துக்கள் ஜப்தி'
நாமக்கல்:நாமக்கல்லில், நோட் டீஸ் ஒட்டப்படும் வரி செலு த்தாத கடைகளின் அசையா சொத்துக்களை, 24 மணி நேரத்திற்குள் ஜப்தி செய்யப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட இனங்களில் இதுவரை, 78 சதவீதம் மட்டுமே வசூல் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திருத்திய சட்டப்படி 2024--25-ம் நிதியாண்டு வரை வரி மற்றும் கட்டணங்களை செலுத்த வேண்டிய கால
அவகாசம் கடந்த அக்., மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.தற்போது வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாத நபர்களின் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை மாநகராட்சி வசம் கையகப்படுத்த ஜப்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் திருச்சி சாலை, துாபன் குமாரமங்கலம் தெரு, பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் வரி செலுத்தாத கடைகளில், மாநகராட்சி பணியாளர்கள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர். அதில், 24 மணி நேரத்திற்குள் வரி நிலுவையை செலுத்தாவிட்டால், அசையா சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.