/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.கோட்டில் 'கனவு இல்லம்' 245 பேருக்கு ஆணை வழங்கல்
/
தி.கோட்டில் 'கனவு இல்லம்' 245 பேருக்கு ஆணை வழங்கல்
தி.கோட்டில் 'கனவு இல்லம்' 245 பேருக்கு ஆணை வழங்கல்
தி.கோட்டில் 'கனவு இல்லம்' 245 பேருக்கு ஆணை வழங்கல்
ADDED : ஜூலை 16, 2024 01:41 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டை சேர்ந்த, 245 பயனாளிகளுக்கு, தமிழக அரசின் குடிசைகள் இல்லா தமிழகம் முன்னெடுப்பு திட்டத்தில், 'கலைஞரின் கனவு இல்லம்' ஆணை வழங்கும் நிகழ்ச்சி, ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.
ஒன்றிய பெருந்தலைவர் சுஜாதா தங்கவேல் தலைமை வகித்தார். இதில், கிராமப்புற ஊராட்சி பகு-திகளை சேர்ந்த ஏழை மக்களுக்கு, தலா, 3.5 லட்சம் ரூபாய் மதிப்பில், 360 சதுர அடியில் கான்கிரீட் கட்டடம் கட்டித் தரப்படு-கிறது. அதன்படி, திருச்செங்கோடு ஒன்றியத்தை சேர்ந்த, 245 பேருக்கு, 8 கோடியே, 57 லட்சத்து, 50,000 ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு அதற்கான ஆணையை, திருச்செங்கோடு தொகுதி, எம்.எல்.ஏ., ஈஸ்வரன், மேற்கு மாவட்ட தி.மு.க., செய-லாளர் மதுராசெந்தில், அட்மா தலைவர் தங்கவேல் ஆகியோர் வழங்கினர்.