ADDED : அக் 27, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை இளங்கிளிகள் கபடிக்குழு சார்பில், தீபாவ-ளியையொட்டி ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான கபடி போட்டியை நடத்தி வருகின்றனர்.
24ம் ஆண்டான இந்தாண்டு கபடி போட்டி, நேற்று இரவு அண்ணா கலையரங்க மைதா-னத்தில் தொடங்கியது. பகல் இரவாக நடக்கும் கபடி போட்-டியில் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன. இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா, இன்று நடக்கிறது.