/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அம்மன் கழுத்தில் இருந்த 2.5 பவுன் தங்க தாலி திருட்டு
/
அம்மன் கழுத்தில் இருந்த 2.5 பவுன் தங்க தாலி திருட்டு
அம்மன் கழுத்தில் இருந்த 2.5 பவுன் தங்க தாலி திருட்டு
அம்மன் கழுத்தில் இருந்த 2.5 பவுன் தங்க தாலி திருட்டு
ADDED : ஜூலை 16, 2025 01:32 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அருகே, மாரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த, 2.5 பவுன் தங்க தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நாமகிரிப்பேட்டை அடுத்த காக்காவேரி கிராமம், அப்புநாயக்கன்பட்டியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. அம்மன் கழுத்தில், 2.5 பவுன் தங்கத்தாலி அணிவிக்கப்பட்டிருந்தது. கோவிலில் பூஜை செய்யும் பணியை, அதே பகுதியை சேர்ந்த பூசாரி பழனிசாமி, 60, செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் கோவிலை திறக்க சென்ற பழனிசாமி, கோவில் கதவின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, ஊர் மக்கள் முன்னிலையில் கோவில் கதவு திறக்கப்பட்டது. உள்ளே சென்று பார்த்தபோது, பெரிய உண்டியலின் பூட்டை உடைத்து காணிக்கை மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த, 2.5 பவுன் தங்கத்தாலி திருடப்பட்டிருந்தது
தெரியவந்தது.
இதுகுறித்து, ஊர் தர்மகர்த்தாவான, பொம்மநாயக்கர் மகன் தனராஜ், 53, அளித்த புகார்படி, நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரித்து
வருகின்றனர்.