/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தலைமை செயலகம் முற்றுகை 250 பேர் பங்கேற்க முடிவு
/
தலைமை செயலகம் முற்றுகை 250 பேர் பங்கேற்க முடிவு
ADDED : ஜூலை 28, 2025 04:03 AM
திருச்செங்கோடு: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், மாவட்ட செயற்குழு கூட்டம், திருச்செங்கோட்டில் நடந்தது.
மாநில துணை தலைவர் நடேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில துணை செய-லாளர் அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கோரிக்கை குறித்து விளக்கினார்.கூட்டத்தில், வரும் ஆக., 22ல், சென்னையில் நடக்கும் தலைமை செயலக முற்றுகை போராட்டத்தில், 250 ஆசிரியர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. ஆசிரியர்களுக்கு எதி-ரான ஊக்க ஊதிய உயர்வு, தர ஊதியம், கூடுதல் பட்டப்படிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு பி.எல்.ஓ., பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்பட
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.