தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/'காலை உணவு வழங்கும் திட்டத்தில் 2,664 துாய்மை பணியாளர்கள் பயன்'

'காலை உணவு வழங்கும் திட்டத்தில் 2,664 துாய்மை பணியாளர்கள் பயன்'

'காலை உணவு வழங்கும் திட்டத்தில் 2,664 துாய்மை பணியாளர்கள் பயன்'


ADDED : பிப் 10, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: 'மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்.,களில், துாய்மை பணியாளர்களுக்கு, காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ், 2,664 பேர் பயன்-பெறுவர்' என, எம்.பி., ராஜேஸ்குமார் கூறினார்.

சென்னையில் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்.,களில் துாய்மை பணியாளர்களுக்கு, காலை உணவு வழங்கும் திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதையடுத்து, நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மத்-திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், துாய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாரினார். முன்னதாக அவர் பேசியதா-வது: நாமக்கல் மாநகராட்சியில் உள்ள, 860 துாய்மை பணியாளர்களுக்கு, காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்-கான ஆண்டிற்கு, 1.43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், காலை உணவு, 28 இடங்களில், 860 பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், மதிய உணவு, 98 பேருக்கும், இரவு உணவு, 17 பேருக்கும் வழங்கப்-பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம், 2025 டிச., 20 முதல், கடந்த, 7 வரை, 50 நாட்கள், தினமும், ஐந்து இடங்களில், 9,720 பேருக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில், 4 நகராட்சிகளில், 919 பேருக்கும், 19 டவுன் பஞ்.,களில், 925 பேருக்கும், காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்-படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் டவுன் பஞ்.,களில், மொத்தம் 2,664 துாய்மை பணியாளர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநகராட்சி துணை மேயர் பூபதி, கமிஷனர் சிவகுமார், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவ-லர்கள் உள்பட பலர்

பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us