/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை
/
விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை
விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை
விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை
ADDED : அக் 27, 2024 01:17 AM
பள்ளிப்பாளையம், அக். 27-
பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இதில், 30,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, தீபாவளி போனஸ் பேச்சுவார்த்தை நடத்தி, சதவீதம் அடிப்படையில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். தீபாவளிக்கு இன்னும், 4 நாட்களே உள்ளதால், விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி போனஸ் ஒப்பந்தம் போட வேண்டும். இதனால், நேற்று முன்தினம் இரவு, 8:00 முதல், 10:00 மணி வரை, தனியார் மண்டபத்தில் போனஸ் பேச்சுவார்த்தை நடந்தது.
பள்ளிப்பாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் கந்தசாமி, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அசோகன் மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தினர், 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என, தெரிவித்தனர். ஆனால், உரிமையாளர் சங்கத்தினர், 9.50 சதவீதம் போனஸ் வழங்குவதாக தெரிவித்தனர். உடன்பாடு ஏற்படாததால், 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (27 தேதி) நடக்கிறது. இதில், போனஸ் உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கையில் விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர்.