ADDED : ஏப் 26, 2026 05:19 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, எஸ்.பி.பி., காலனி பகுதியை சேர்ந்த வஜ்ரவேல், 60; கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த வல்லரசு, 28, ரகுபதி, 26, விஜயன், 22, ஆகியோருக்கு இடையே, கடந்த, 8 இரவு பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதில், மூன்று பேர் சேர்ந்து வஜ்ரவேலை சரமாரியாக தாக்கியுள்ளனர். மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட வஜ்ரவேல், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார், நேற்று வழக்குப்பதிவு செய்து, வல்லரசு, ரகுபதி, விஜயன் ஆகிய, மூன்று பேரை கைது செய்தனர்.
