ADDED : மார் 12, 2026 07:24 AM
ப.வேலுா:கரூர்
மாவட்டம் வாங்கல் காவிரி ஆற்றில் இருந்து மணல் திருடிக்கொண்டு,
ப.வேலுாருக்கு செல்வதாக தகவல் கிடைத்தது.
அதன்படி, நாமக்கல் மாவட்டம்
புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி பொறியாளர் ஜெகதீசன் தலைமையில்,
நேற்று முன்தினம் இரவு ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் வாகன சோத-னையில்
ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மூன்று மணல் லாரியை தடுத்து
நிறுத்தினர். அப்போது லாரியை ஓட்டி வந்த டிரைவர்கள் தப்பி ஓடினர்.
அதில், காவிரி ஆற்று மணல் இருந்தது. ஆனால், மணலுக்கு உரிய ஆவணம் இல்லை.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவிரி ஆற்றில் மணலை சட்ட விரோதமாக
திருடி விற்பனைக்கு, நாமக்கல்லுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.இதையடுத்து
மூன்று மணல் லாரியை பறிமுதல் செய்து, ப.வேலுார் போலீசில்
ஒப்படைத்தனர். மேலும், தலைமுறை-வான மணல் லாரி டிரைவர்களை போலீசார்
தேடி வருகின்றனர்.
