ADDED : டிச 09, 2024 07:11 AM
ராசிபுரம்: கொல்லிமலையில் சுற்றுப்பயணம் செய்த டில்லியை சேர்ந்த தொண்டு நிறுவனம், பழங்குடியின மக்களுக்கான ஸ்மார்ட் ட்ரைபல் பார்மிங் புராஜெக்ட் திட்டத்தின் கீழ், 3 கிராமங்களை தத்தெடுத்துள்ளனர். கொல்லிமலையில் உள்ள தேவனுார் நாடு, சேலுார் நாடு, திண்ணனுார் நாடு ஆகிய கிராமங்களை தேர்வு செய்துள்ளனர். நேற்று மலை, கிராமத்திற்கு வந்த தொண்டு நிறுவன அலுவலர்களிடம் கொல்லிமலை முன்னோடி விவசாயிகள், அரசு அதிகாரிகள் கலந்துரையாடினர்.
மேலும், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனம், பழங்குடியின விவசாயிகளின் சந்தேகங்கள் மற்றும் மனுக்களை பதிவு செய்ய, 5 கம்ப்யூட்டர்களை வழங்கியுள்ளனர். இதை பாரதிய கிசான் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணி வரவேற்றுள்ளார். இதன் மூலம் கொல்லிமலை விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயரும் என தெரிவித்தார்.