/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முதியவர் மீது தாக்குதல் 3 இளைஞர்கள் கைது
/
முதியவர் மீது தாக்குதல் 3 இளைஞர்கள் கைது
ADDED : ஜன 19, 2025 06:57 AM
ராசிபுரம்: ராசிபுரம், கவுண்டம்பாளையம் தேவேந்திர தெருவை சேர்ந்-தவர் சுடலைமுத்து, 70; இவர், கடந்த, 16ல் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் வேகமாக வந்த, 2 வாலிபர்கள், மோதுவது போல் சென்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த சுடலைமுத்து, வாலிபர்களை திட்டியுள்ளார். ஆத்திரமடைந்த வாலிபர்கள், சுடலைமுத்துவை தாக்கியுள்ளனர். தடுத்த பொது-மக்களையும் தாக்கியுள்ளனர். காயமடைந்த, 10க்கும் மேற்-பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இருவரையும் பிடித்து பொதுமக்கள் விசாரித்த போது, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சண்முகம் மகன் சஞ்சய், 25, மணிகண்டன், 23, என்பது தெரிந்தது.
இதுகுறித்து சுடலைமுத்து கொடுத்த புகார்படி, ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாததை கண்டித்து, நேற்று முன்தினம் இரவு பொது-மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராசிபுரம் போலீசார், சம-ரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இரவில் கத்தி-யுடன் சுற்றித்திரிந்த கவுண்டம்பாளையம் தேவேந்திரர் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் சந்தோஷ், 25, குருக்கபுரத்தை சேர்ந்த பெரியசாமி மகன் சிவராஜ், 26 மற்றும் முதியவரை தாக்கிய சஞ்சய் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

