/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இலவச வீட்டுமனை கேட்டு 300 குடும்பத்தினர் மனு
/
இலவச வீட்டுமனை கேட்டு 300 குடும்பத்தினர் மனு
ADDED : டிச 24, 2024 01:52 AM
நாமக்கல், டிச. 24-
முத்துகாப்பட்டியை சேர்ந்த எஸ்.சி., - எஸ்.டி., மக்கள், இலவச வீட்டுமனை கேட்டு, நாமக்கல் கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
சேந்தமங்கலம் தாலுகா, முத்துகாப்பட்டி, பெருமாம்பாளையம், குறவன் காலனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஏழை, எளிய மக்களாகிய எங்களுக்கு சொந்த வீடோ, நிலமோ இல்லை.
அதனால், கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டுமனை வழங்க கேட்டோம். ஆனால், வருவாய்த்துறையினர், முத்துகாப்பட்டி ஊராட்சி சக்களாக்காடு மற்றும் தோட்டாக்குடோன் அருகே குறவன், அருந்ததியர், தேவேந்திர குல வேளாளர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டுமனை கொடுப்பதாக
தெரிவித்தனர். எனவே, மேலே குறிப்பட்ட நிலத்தை ஆய்வுசெய்து வறுமையில் வாழும் எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க உதவி செய்ய
வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.