/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்ட அளவில் சிலம்ப போட்டி 3,000 மாணவ, மாணவியர் பங்கேற்பு
/
மாவட்ட அளவில் சிலம்ப போட்டி 3,000 மாணவ, மாணவியர் பங்கேற்பு
மாவட்ட அளவில் சிலம்ப போட்டி 3,000 மாணவ, மாணவியர் பங்கேற்பு
மாவட்ட அளவில் சிலம்ப போட்டி 3,000 மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : அக் 03, 2024 07:19 AM
நாமக்கல்: காந்தி ஜெயந்தியையொட்டி, நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா, மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்கம் சார்பில், சிலம்பம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.
சிலம்ப ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா கணக்-காளர் வள்ளுவன் முன்னிலை வகித்தார். நேரு யுவகேந்திரா மாவட்ட ஆலோசனைக்குழு உறுப்-பினர் தில்லை சிவக்குமார், ஓய்வுபெற்ற டி.இ.ஓ., உதயக்குமார் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்து பேசினர். நாமக்கல் மாவட்டம் முழு-வதும் உள்ள அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சிலம்ப பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்கள், தொடர்ந்து, 30 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.சிறப்பாக சிலம்பம் சுழற்றிய மாணவ, மணவிய-ருக்கு, பரிசு, பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. சிலம்ப ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சங்க செயலாளர் கார்த்திகேயன், துணைத்தலை-வர்கள் சந்துரு, மாரிமுத்து, பொருளாளர் சீனி-வாசன், துணைச்செயலாளர் சங்கர், ஒருங்கி-ணைப்பாளர் பாண்டியன், போட்டி இயக்குனர் முரளிதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

