/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில் நடப்பாண்டில் 301 இடங்கள் காலி
/
நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில் நடப்பாண்டில் 301 இடங்கள் காலி
நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில் நடப்பாண்டில் 301 இடங்கள் காலி
நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில் நடப்பாண்டில் 301 இடங்கள் காலி
ADDED : ஜூன் 27, 2024 03:34 AM
நாமக்கல்: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், நடப்பு கல்வி ஆண்டிற்கு நடந்த மாணவியர் சேர்க்கையில், 669 இடங்கள் நிரம்பி உள்ளன. 301 இடங்கள் காலியாக உள்ளன.
நாமக்கல் - திருச்சி சாலையில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லுாரி அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவியர் படித்து வருகின்றனர். இக்கல்லுாரியில், 13 இளநிலை பாடப்பிரிவுகளில், 970 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. நடப்பு, 2024-25ம் கல்வியாண்டிற்கான மாணவியர் சேர்க்கை, மே, 29ல் துவங்கியது. அதற்காக, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 5,757 மாணவியர், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், இளநிலை பட்டப்படிப்பு சிறப்பு ஒதுக்கீட்டில், மாணவியர் சேர்க்கை, மே, 29ல் துவங்கியது. தொடர்ந்து, முதல் கட்ட பொது கலந்தாய்வு, கடந்த, 10ல் துவங்கி, 14 வரை நடந்தது. கடந்த, 24ல், தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுக்கும், நேற்று முன்தினம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.
இதுகுறித்து, கல்லுாரி நிர்வாகத்தினர் கூறியதாவது:
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், நடப்பு கல்வியாண்டுக்கான கலந்தாய்வு, சிறப்பு பிரிவு, முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக நடந்த முடிந்துள்ளது. அதில், மொத்தம் உள்ள, 970 இடங்களில், 669 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதம், 301 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை, அரசு அறிவுறுத்தலின்படி, வரும் நாட்களில் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.