/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
303 பேருக்கு வன உரிமை வழங்கப்பட்டுள்ளதுதிறன் வளர்ப்பு பயிற்சியில் கலெக்டர் தகவல்
/
303 பேருக்கு வன உரிமை வழங்கப்பட்டுள்ளதுதிறன் வளர்ப்பு பயிற்சியில் கலெக்டர் தகவல்
303 பேருக்கு வன உரிமை வழங்கப்பட்டுள்ளதுதிறன் வளர்ப்பு பயிற்சியில் கலெக்டர் தகவல்
303 பேருக்கு வன உரிமை வழங்கப்பட்டுள்ளதுதிறன் வளர்ப்பு பயிற்சியில் கலெக்டர் தகவல்
ADDED : ஏப் 26, 2025 01:09 AM
நாமக்கல்:''மாவட்டத்தில், 303 பேருக்கு வன உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதில், 233 பேருக்கு தனி உரிமை வழங்கப்பட்டுள்ளது,'' என, திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில், கலெக்டர் உமா பேசினார்.
நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 'வன உரிமை சட்டம்--2006' நடைமுறைப்படுத்துவது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுக்கு, மாவட்ட அளவிலான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம், நேற்று நடந்தது. மாவட்ட வனப்பாதுகாவலர் கலாநிதி முன்னிலை வகித்தார். கலெக்டர் உமா தலைமை வகித்து
பேசியதாவது:
பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனங்களில் குடியிருப்போரின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசால் பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக, 'வனங்களில் குடியிருப்போர் சட்டம்-2006' இயற்றப்பட்டு, பழங்குடியினர் குடியிருக்கும் வன நிலங்களுக்கு, புவியியல் தரவின் அடிப்படையில், தனி நபர் உரிமைகள் மற்றும் சமூக உரிமைகள் கலெக்டரால் வழங்கப்படுகிறது. வனம் சார்ந்து வாழும் பழங்குடியின மக்கள், விளிம்பு நிலை மக்கள், அவர்களது அடிப்படை உரிமைகளையும், அவர்களுக்கு அரசு சார்பில் செய்ய கூடியது என்ன என்பதில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக ஒருங்கிணைப்பு கூட்டம் நடக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில், 303 பேருக்கு வன உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில், 233 பேருக்கு, தனி உரிமை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை பகுதி மலைவாழ் தலமாகும். அப்பகுதி மக்கள், வணிக நோக்கமின்றி இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களது உரிமைகளை அறிந்துகொள்ள ஒரு நாள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்படுகிறது.
ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள அரசுத்துறை அலுவலர்கள், தங்களுக்கு உள்ள சந்தேகங்களை கேட்டு தீர்வு காணலாம். வன உரிமை சட்டம்-2006 குறித்த, ஒரு நாள் கருத்தரங்கை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், ஆர்.டி.ஓ., சுகந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.