/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் உழவர் சந்தையில் 32 டன் காய்கறி விற்பனை
/
ராசிபுரம் உழவர் சந்தையில் 32 டன் காய்கறி விற்பனை
ADDED : ஏப் 27, 2025 04:00 AM
ராசிபுரம்: ராசிபுரம் உழவர் சந்தைக்கு, நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மங்க-ளபுரம், திம்மநாயக்கன்பட்டி, என மாவட்டத்தின் எல்லை பகு-தியில் இருந்தும் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதேபோல், ராசிபுரம், வெண்ணந்துார் ஒன்றியத்தில் இருந்தும் அதிக விவசாயிகள் காய்கறிகளை விற்ப-னைக்கு கொண்டு வருகின்றனர்.
நேற்று நடந்த சந்தையில், தக்காளி கிலோ, 15, கத்தரி, 30, வெண்டை, 25, புடலை, 35, பீர்க்கன், 45, பாகல், 42, சுரைக்காய், 15, பச்சை மிளகாய், 30, முருங்கை, 35,  சின்ன வெங்காயம், 38, பெரிய வெங்காயம், 34, முட்டைகோஸ், 15, கேரட், 50, பீன்ஸ், 70, பீட்ரூட், 35 ரூபாய், வாழைப்பழம், 40, கொய்யா, 50, பப்பாளி, 30, தர்பூசணி, 20,  எலுமிச்சை, 60, ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று ஒரே நாளில், 223 விவசாயிகள் தங்களது விளை பொருட்-களை விற்க கொண்டு வந்திருந்தனர். 23,840 கிலோ காய்கறி, 7,910 கிலோ பழங்கள், 420 கிலோ பூக்கள் என, மொத்தம், 32,170 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின.
இதன் மொத்த மதிப்பு, 11.88 லட்சம் ரூபாயாகும். 6,120 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர். நேற்று ஒரே நாளில், 32 டன்  காய்கறி, பழங்கள் விற்பனையா-கின.

