/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஞ்சாப்பில் இருந்து நாமக்கல்லுக்கு 3,300 டன் கோதுமை வரவழைப்பு
/
பஞ்சாப்பில் இருந்து நாமக்கல்லுக்கு 3,300 டன் கோதுமை வரவழைப்பு
பஞ்சாப்பில் இருந்து நாமக்கல்லுக்கு 3,300 டன் கோதுமை வரவழைப்பு
பஞ்சாப்பில் இருந்து நாமக்கல்லுக்கு 3,300 டன் கோதுமை வரவழைப்பு
ADDED : அக் 30, 2024 11:54 PM
நாமக்கல்:நாமக்கல் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு தேவையான, 3,300 டன் கோதுமை பஞ்சாப்பில் இருந்து வரவழைக்கப்பட்டது.
நாமக்கல்
மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம்,
தவுடு, புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும், ரேஷன்
கடைகளுக்கு தேவையான கோதுமை, சக்கரை, அரிசி உள்ளிட்ட உணவு
பொருட்களும் பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்
மூலம் வரவழைக்கப்படுகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில்
செயல்படும் ரேஷன் கடைகளின் தேவைக்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து, 57
வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், 3,300 டன் கோதுமை வரவழைக்கப்பட்டது.
நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து லாரிகளில் ஏற்றி,
நல்லிபாளையத்தில் உள்ள தமிழ்நாடு உணவுப்பொருள் வாணிப கிடங்கிற்கு
கொண்டு செல்லப்பட்டன.