sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

1,780 ஓட்டுச்சாவடிகளில் நடந்த முகாமில் புதிய வாக்காளர் 33,000 பேர் விண்ணப்பம்

/

1,780 ஓட்டுச்சாவடிகளில் நடந்த முகாமில் புதிய வாக்காளர் 33,000 பேர் விண்ணப்பம்

1,780 ஓட்டுச்சாவடிகளில் நடந்த முகாமில் புதிய வாக்காளர் 33,000 பேர் விண்ணப்பம்

1,780 ஓட்டுச்சாவடிகளில் நடந்த முகாமில் புதிய வாக்காளர் 33,000 பேர் விண்ணப்பம்


ADDED : ஜன 01, 2026 08:10 AM

Google News

ADDED : ஜன 01, 2026 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ''1,780 ஓட்டுச்சாவடிகளில் நடந்த சிறப்பு முகாமில், புதிய வாக்காளர்களாக பெயர் சேர்க்க, 33,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்,'' என, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி பேசினார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்-பான ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்கா மூர்த்தி முன்னிலை வகித்தார். இந்திய தேர்தல் ஆணை-யத்தின், வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வை-யாளர் குல்திப் நாராயண் தலைமை வகித்து பேசு-கையில், ''தகுதி உள்ள வாக்காளர்கள் யாரும் விடுபடாமல், வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். இப்பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவ-லர்கள், மிகுந்த கவனத்துடன் படிவங்களை சரி-பார்க்க வேண்டும்,'' என்றார்.

நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி பேசியதாவது:கடந்த, 19ல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, 12 லட்சத்து, 74,000 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், விடுபட்ட வாக்கா-ளர்கள், புதிய வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் ஆகியோருக்கான சிறப்பு முகாம், மாவட்டத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்-டத்தில், 1,780 ஓட்டுச்சாவடி மையங்களிலும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால், படிவம் 6, 8 வழங்கப்பட்டு, புதிய வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 33,000 படி-வங்கள் பெறப்பட்டுள்ளன.

வரும், 3, 4 ஆகிய தேதிகளில், சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் இளம் வாக்காளர்கள் தங்களு-டைய ஓட்டுச்சாவடி மையங்களில் தொடர்பு-கொண்டு, தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். வரும் பிப்., 17ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

விடுபட்ட வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள், உரிய படிவங்களை வழங்கி, தங்களது ஜனநாயக கடமையை ஆற்று-வதற்காக, சிறப்பு முகாமை பயன்படுத்திக்-கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us