sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை மாவட்டத்தில் 34,134 பேர் தேர்வு

/

2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை மாவட்டத்தில் 34,134 பேர் தேர்வு

2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை மாவட்டத்தில் 34,134 பேர் தேர்வு

2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை மாவட்டத்தில் 34,134 பேர் தேர்வு


ADDED : டிச 11, 2025 06:54 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நளை, மகளிர் உரிமைத்தொகை இரண்டாம் கட்-டமாக வழங்கும் திட்டத்தில், நாமக்கல் மாவட்-டத்தில், 34,134 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், 'மகளிர் உரிமைத்தொகை திட்டம்' முதற்கட்டமாக, 2023 செப்., 15ல், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளில், தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்-களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், ஆண்டுக்கு, 12,000 ரூபாய் உரிமைத்-தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து, நாளை (டிச., 12), இரண்டாம் கட்ட-மாக, உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை, சென்னையில், முதல்வர் தொடங்கி வைக்கிறார். நாமக்கல் மாவட்டத்தில், 37,134 மகளிருக்கு, 'மகளிர் உரிமைத்தொகை' வழங்கும் வகையில், 2-ம் கட்ட தொடக்க விழா, அரசு மருத்துவ கல்-லுாரி

மருத்துவமனை கலையரங்கில் நடக்கிறது. அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் துர்கா மூர்த்தி, எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், பிரகாஷ், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர்.அதன்படி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மகளிர் உரிமைத்தொகை, 2-ம் கட்டம் தொடக்க விழா குறித்து துறை சார்ந்த அலுவலர்களுட-னான ஆலோசனை, கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சரவணன், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, ஆர்.டி.ஓ.,க்கள் சாந்தி, லெனின், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us