/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'வெளிநாட்டு இறக்குமதியை தவிர்த்து நாமே உற்பத்தி செய்ய வேண்டும்'
/
'வெளிநாட்டு இறக்குமதியை தவிர்த்து நாமே உற்பத்தி செய்ய வேண்டும்'
'வெளிநாட்டு இறக்குமதியை தவிர்த்து நாமே உற்பத்தி செய்ய வேண்டும்'
'வெளிநாட்டு இறக்குமதியை தவிர்த்து நாமே உற்பத்தி செய்ய வேண்டும்'
ADDED : செப் 21, 2024 03:12 AM
நாமக்கல்: ''வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு பதில், நாமே உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்,'' என, பத்மஸ்ரீ ஸ்ரீதர்வேம்பு பேசினார்.
நாமக்கல் மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியஷன் சார்பில், கிராமப்புறங்களில் தொழில் நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகள்
தொடர்பான கருத்தரங்கு நடந்தது. அசோசியேஷன் தலைவர் கணேசன் வரவேற்றார். துணைத்தலைவர் சேதுராமன், கணேசன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். பத்மஸ்ரீ ஸ்ரீதர்வேம்பு பங்-கேற்று பேசியதாவது:
இன்றைய கிராமப்புறங்களில் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர், தாங்கள் படிக்கின்ற பகுதிகளில் உள்ள தொழில்கள் பற்றிய
தொழில் நுட்ப வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு பதில், நாமே
உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். நகரங்களை நோக்கி வேலைக்காக செல்ல செல்ல, நகர
வாழ்க்கை நரக வாழ்க்கையாகி வருகிறது. நாம் இருகின்ற இடத்தில் பணி செய்ய நல்ல வாய்ப்புகள் கிராம புறங்களில் உள்ளன.
அதற்கான தொழில் நுட்ப அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.