/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராகவேந்திரா சுவாமிக்கு 354வது ஆராதனை விழா
/
ராகவேந்திரா சுவாமிக்கு 354வது ஆராதனை விழா
ADDED : ஆக 12, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்,
சேந்தமங்கலம் அடுத்து அக்கியம்பட்டியில் அமைந்துள்ள குரு ராகவேந்திரா பிருந்தாவனத்தில், நேற்று காலை, 7:00 மணிக்கு, 354வது ஆராதனை விழாவையொட்டி யாக வேள்வி, சுப ஹோமங்கள் தொடங்கின.
தொடர்ந்து, ராகவேந்திரர் சுவாமிக்கு பால், தேன், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின், கோவில் வளாகத்தில் மாபெரும் அன்னதானம் நடந்தது. விழாவில், அக்கியம்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள
பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.