ADDED : ஏப் 09, 2025 01:45 AM
அ நிறம் | அளவு
358 கிலோ பட்டுக்கூடு ஏலம்
ராசிபுரம்:ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று, 358 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 515 ரூபாய், குறைந்தபட்சம், 320 ரூபாய், சராசரி, 415 ரூபாய் என, 358 கிலோ பட்டு கூடு, 1.48 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
