/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தத்தகிரி முருகன் கோவிலில் கந்த சஷ்டி 3வது நாள் பூஜை
/
தத்தகிரி முருகன் கோவிலில் கந்த சஷ்டி 3வது நாள் பூஜை
தத்தகிரி முருகன் கோவிலில் கந்த சஷ்டி 3வது நாள் பூஜை
தத்தகிரி முருகன் கோவிலில் கந்த சஷ்டி 3வது நாள் பூஜை
ADDED : அக் 25, 2025 01:58 AM
சேந்தமங்கலம், தத்தகிரி முருகன் கோவிலில், கந்த சஷ்டியின், 3வது நாள் வழிபாடு, நேற்று காலை நடந்தது.
தமிழ் கடவுளான முருகன், சூரனை வதம் செய்த நிகழ்வை தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டியையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் தினமும் பூஜை நடந்து வருகிறது.
அதன்படி, 3வது நாளான, நேற்று காலை சேந்தமங்கலம்-நாமக்கல் பிரதான சாலையில் அமைந்துள்ள தத்தகிரி முருகன் கோவிலில் உள்ள மூலவருக்கு பால், தயிர், தேன் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தத்தகிரி முருகன் கோவிலில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அன்று காலை, பால் காவடி, பன்னீர் காவடி எடுப்பது வழக்கம். அதையொட்டி, முருக பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கி உள்ளனர். நிறைவாக கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

