ADDED : ஏப் 07, 2026 02:25 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம், தமிழக சட்டசபை தேர்தல், வரும், 23ல் நடக்கிறது. முன்னேற்பாடு பணிகளை போலீசார் உள்ளிட்ட ஒவ்வொரு துறையினரும் செய்து வருகின்றனர். மக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக ஓட்டளிக்கும் வகையில், மத்திய ராணுவ பாதுகாப்பு படையினர் கொடி அணி வகுப்பு நடத்தி வருகின்றனர்.
அவர்கள், ராஜஸ்தானிலிருந்து வந்த பாதுகாப்பு படையினர், நேற்று ராஜம் தியேட்டர் முன்பிருந்து, 3ம் கட்ட சேலம் சாலை, இடைப்பாடி சாலை வழியாக காவேரி நகர் வரை டி.எஸ்.பி., கவுதம், இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
