நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்:குமாரபாளையம்
மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சந்துக்கடைகளில் மது
விற்பனை அதிகம் நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து,
குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார்,
சம்பந்தப்பட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
இதில்,
மேற்கு காலனி, சந்தைப்பேட்டை, பழைய முருகன் தியேட்டர் ஆகிய பகுதிகளில்
மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்ற பாலன், 64,
கண்ணப்பன், 54, உத்தமன், 48, மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு
செய்யும் வகையில் மது குடித்து கொண்டிருந்த பிரபு, 40, ஆகிய நான்கு பேரை
கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

