sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரிக் உரிமையாளரிடம் ரூ.3 கோடி மோசடி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது

/

ரிக் உரிமையாளரிடம் ரூ.3 கோடி மோசடி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது

ரிக் உரிமையாளரிடம் ரூ.3 கோடி மோசடி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது

ரிக் உரிமையாளரிடம் ரூ.3 கோடி மோசடி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது


ADDED : செப் 20, 2024 02:46 AM

Google News

ADDED : செப் 20, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: திருச்செங்கோட்டில், ரிக் உதிரி

பாகங்கள் நிறுவன உரிமையாளரிடம், மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ரிக் வாகனங்களுக்-கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வரு-பவர் தனேஷ்குமார், 45. இவருடைய நிறுவனத்தில், சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே சூரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார், 29, என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த, 2019 முதல், நிறுவனத்தின் வரவு, செலவு கணக்குகள், பொருள்கள் விற்பனை உள்ளிட்டவற்றை நம்பிக்கை அடிப்ப-டையில், ரஞ்சித்குமார் வசம் தனேஷ்குமார் ஒப்படைத்தார். ஆனால் அவரை ஏமாற்றி, பொருள்கள் விற்பனை செய்த வகையில் வர வேண்டிய தொகையை தன்னுடைய வங்கி கணக்-கிலும், அவரது சகோதரர் தினேஷ்குமார், 28, தாய் லதா, 48, தந்தை சரவணன், 52, ஆகியோரின் வங்கி கணக்கிலும் செலுத்தி உள்ளார். நிலுவையில் உள்ள தொகை, நெடுநாட்களாக வசூலா-காததை கண்டு சந்தேகமடைந்த தனேஷ் குமார், மற்றொரு நபரை வேலைக்கு அமர்த்தி

ரஞ்சித்குமாரின் நடவடிக்கைகளை கண்காணித்தார்.

இதில் மூன்று கோடி ரூபாய் வரை, அவர் பணத்தை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட எஸ்.பி., ராஜேஸ்கண்ணனிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரு-டைய உத்தரவின்படி, மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சவீதா விசாரணை நடத்தினார்.

இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும், பண மோச-டியில் ஈடுபட்டது உறுதியானது. இதை தொடர்ந்து ரஞ்சித்குமார், தினேஷ் குமார், லதா, சரவணன் ஆகிய நான்கு பேரும் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us