/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கரும்பு தொழிலாளி கொலை வழக்கு 10 மாதத்துக்கு பின் 4 பேருக்கு 'காப்பு'

ADDED : டிச 24, 2024 01:54 AM
பள்ளிப்பாளையம், டிச. 24-
பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த பலநாய்க்கன்பாளையத்தில், கடந்த மார்ச், 17ல் விவசாய நிலத்தில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. மொளசி போலீசார் விசாரணையில், சடலமாக கிடந்தவர், கரும்பு வெட்ட வந்த புனேவை சேர்ந்த கூலித்தொழிலாளி கிரண், 35, என்பது தெரியவந்தது. மேலும், இவருடன் வேலை பார்த்த புனேவை சேர்ந்த ரஞ்சித்குமார், 30, என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். மொளசி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், கூலிப்பிரச்னையில் கிரண், ரஞ்சித்குமார் ஆகிய இருவரும் தட்டிக்கேட்டதால், உடன் வேலை செய்து வந்த புனேவை சேர்ந்த மாருதி டோங்கே, 20, உத்தவ், 40, இறையமங்கலம் பகுதியை சேர்ந்த விஜய், 28, மொளசியை சேர்ந்த தனசேகர், 30 ஆகிய, 4 பேர் சேர்ந்து, இருவரையும் அடித்து துன்புறுத்தி கொலை செய்தது தெரிய வந்தது. கடந்த, 10 மாதங்
களாக தலைமறைவாக இருந்த மாருதி டோங்கே, உத்தவ், விஜய், தனசேகர் ஆகியோரை, நேற்று கொக்கராயன்பேட்டை பட்லுார் பிரிவில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.